சென்னை,நவம்பர் 13:வடசென்னை முக்கிய பகுதிகளில் ஒன்றான கொடுங்கையூர் பகுதி மழையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இங்குள்ள கவிஞர் கண்ணதாசன் நகர் பேருந்து பணிமனை நிலையம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முத்தமிழ் நகர் பகுதியில் மரங்கள் சாய்ந்து வீழ்ந்ததால் மின்கம்பிகள் அறந்துவீழ்ந்துள்ளது.
இதுக்குறித்து முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் கூறுகையில்,"கடந்த சில ஆண்டுகளாகவே இப்பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் மின் கம்பிகள் அறுந்து விழுகின்றன. மின் கம்பிகள் முற்றிலும் பழுதடைந்துள்ளதே இதற்கு காரணம். இதுக்குறித்து மின் வாரியத் துறைக்கு பல தடவை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை. மின் கம்பிகள் அறுந்து பல உயிர் இழப்புகள் கூட இங்கு நிகழ்ந்துள்ளது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் கம்பிகள் மட்டுமல்லாமல் கேபிள் வயர்களுக்கும் இதே நிலைமை தான். அதே போல் பேருந்து நிலைய பணிமனையும் சாலையில் இருந்து சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் லேசாக மழை பெய்தாலும் மழை நீர் பணிமனைக்குள் புகுந்து விடுகின்றது.கடும் மழை என்றால் சொல்லவே தேவை இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.அரசாங்கம் தான் இதற்கு ஒரு தீர்வு கட்ட வேண்டும்." என்றார்.
No comments:
Post a Comment