சென்னை, நவம்பர் 12: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழகம் எங்கும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழையின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்த படியும், மின் கம்பங்கள் பெயர்ந்த படியும் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்தும் உள்ளன. அதுமட்டுமல்லாமல் சாலையிலும் பேருந்து நிலையங்களிலும் மழைநிர் புகுந்து பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது.
சென்னையில் முக்கிய பேருந்து நிலையங்களுள் ஒன்றாக கரதப்படுவது. செங்குன்றம் பேரந்த நிலையம் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வியாழக்கிழமை (12.11.2015) அன்று மாலை பெய்த கனமழையால் பேருந்த நிலையம் முழுவதும் மழை தண்ணீரில் நிரம்பி வழிகின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகி உள்ளனர். பேருந்துகள் தண்ணீரில் மூழ்கியபடி நிற்பதால் பயணிகள் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்களும் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment