கும்மிடிப்பூண்டி நவ. 13: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கும்மிடிப்பூண்டி – சென்னை இடையே இரயில் போக்குவரத்த பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே தாமதமாக இயங்கி வந்த கும்மிடிப்பூண்டி – சென்னை இடையேயான இரயில் போக்குவரத்து மதியத்திற்கு மேல் கும்மிடிப்பூண்டி முதல் திருவொற்றியூர் வரை குறைக்கப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டையில் மழைநீர் இரயில்வே தண்டவாளத்தில் ஆறாக ஓடுவதால் இரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கும்மிடிப்பூண்டி இரயில் நிலைய மேற்பார்வையாளர் கூறியுள்ளார்.
மேலும் வட மாநிலங்களிலிருந்து சென்னை நோக்கி வரும் அதிவேக இரயில்களும் கும்மிடிப்பூண்டியிலிருந்து திருவொற்றியூர் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.இன்று காலை 11 மணி முதல் 2.30 மணி வரை பெரம்பாலான இரயில்கள் இயக்கப்படவேயில்லை அப்படியே இயக்கப்பட்டாலும் கால தாமதமாகவே இயக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னைக்கு செல்ல மக்கள் அதிகம் பயன்படுத்துவது இரயில் சேவையை தான் தற்போது இரயில்கள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இரயில்கள் திருவொற்றியூர் வரை மட்டுமே இயக்கப்படுவதால் மக்கள் திருவொற்றியூர் இரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் வரை நடந்து சென்று திருவொற்றியூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் நிலையில் உள்ளனர்.
.
No comments:
Post a Comment