Thursday, November 12, 2015

மழையினால் மந்தமான பட்டாசு வியாபாரம்
சென்னையில் பட்டாசு வியாபாரம் கடந்த ஆண்டை விட மிகவும் குறைந்துள்ளதாக பட்டாசு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வருடத்தைவிட 30சதவீதம் அதிகரித்துள்ளது.குறிப்பாக கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று தினங்கள் தொடர்ந்து மழை பெய்தது இதனால் தீபாவளி ஓரிரு நாட்களுக்கு முன்பு நடக்கும் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் அதிகமான பட்டாசுகள் மிஞ்சியுள்ளதாகவும்  அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இது குறித்து இராயபேட்டை YMCA மைதானத்தில் கடை வைத்திருந்த துரைராஜ் என்பவர்  கூறும்போது இந்த வருடம் வியாபாரம் மிகவும் பாதியாக குறைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார் மேலும் மிஞ்சியுள்ள பட்டாசுகளை கார்த்திகை தீபத்திற்கு புதிதாக கொள்முதல் செய்யாமல் இருக்கின்ற பட்டாசுகளை விற்பனை செய்யப் போவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment