கும்மிடிப்பூண்டி நவ 13: கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் பருவ மழை காரணமாக கும்மிடிப்பூண்டி சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் முதன்மை விவசாயமாக இருப்பது நெற்பயிர் தான். முன்பெல்லாம் சித்திரை கார், தை கார், பெரும் போகம் (மழைக்கால பயிர்) என வருடத்திற்கு மூன்று முறை பயிர் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. ஆனால் அது காலப்போக்கில் சித்திரை கார் மற்றும் தை கார் மட்டும் பயிரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் விலைநிலங்களில் தேங்கிவிடும் நிர், கால் நடைகளுக்கு உணவு பற்றாக்குறை, வெள்ளத்தால் சூழப்படும் கிராமங்கள், போன்ற காரணங்களால் பெரும்போகம் பயிரிடுதல் கடந்த சில ஆண்டுகளாக தடைப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் தான் நீர் நிலைகள் அதிகம் எனவே பெரும்போக கால பயிரிடுதல் தடைப்பட்டாலும் மற்ற இரண்டு காலத்தின் விவசாயத்திற்கு தேவையான நீர் ஏரிகளில் சேமிக்கப்பட்டு விடுகின்றன்.
பெரும்பான்மையான விவசாயிகள் தவிர்க்கும் பெரம்போகம் பயிரிடுதலை மேடன விவசாய பகுதிகளை கொண்டவர்கள் மட்டும் தொடர்ந்து பயிரிடுகின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட பருவ மழை முன்னரே தொடங்கி விட்டதால் அவர்களின் பயிர்களில் தண்ணீர் தேங்கி பயிரிட்ட நாற்றுகள் அனைத்தும் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுட்டுள்ளது. இனி மழை நின்று நீர் வற்றினால் தான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிக்க முடியும் என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது “மழையின் போக்கை தவறாக கனித்து இம்முறை பயிரிட்டுவிட்டோம். வழக்கமான பெரும்போகம் பயிரிட்ட சில வாரங்களுக்கு பின் தான் மழை தொடங்கும் அப்போது ஓரளவு பயிர்கள் வளர்ந்து நிற்கும் எனவே வெள்ளம் சூழ்ந்தாலும் பயிர்கள் முழுமையாக தண்ணீருள் இருக்காது. ஆனால் இம்முறை மழை சீக்கிரம் தொடங்கி விட்டது. பயிரிட்டுதல் கூட முழுமையாக முடியவில்லை. நாற்றுகள் கூட இன்னும் பிடுக்கப்படாமல் அழுகி வருகிறது.” என்றார்.
No comments:
Post a Comment