Tuesday, September 22, 2015

பர்மா பஜாரில் அழிந்து வரும் வீடியோ கேம்ஸ் CD விற்பனை

பர்மா பஜாரில் அழிந்து வரும் வீடியோ கேம்ஸ் CD விற்பனை
வீடியோ கேம்ஸ் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடக்கூடிய ஒரு பொழுதுப்போக்கு சாதனமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று,அதிலும் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் இன்று அதில் அதிகமாக மூழ்கிக் கிடைக்கின்றனர்.அவ்வாறு வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்கள் கேம்ஸ் CD க்கள் வாங்க அதிகமாக வருவது பர்மா பஜார்க்குதான் ஏனெனில் பர்மா பஜாரில் தான் எல்லாவிதமான வீடியோ கேம்ஸின் டூப்லிகேட் CD களும் குறைந்த விலையில் கிடைக்கும்.இப்படி பர்மா பஜாரில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த கேம்ஸ் CD கள் இப்பொழுது முற்றிலும் குறைந்துவிட்டன.முன்னர் இருந்த வியாபரம் குறைந்ததால் பர்மா பஜாரில் இருந்த நிறைய கடைகள் மூடப்பட்டுவிட்டன என்று கடை வியாபாரி வருத்ததுடன் கூறினார். காரணம் இன்று ஆன்லைன் வர்த்தகத்தில் எல்லாவிதமான ஒரிஜினல் CD களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.எனவே பர்மா பஜார் வியாபாரிகள் CD வியாபாரித்திற்க்கு பதில் வேறு வியாபாரித்திற்க்கு மாறிவருகின்றனர்.

No comments:

Post a Comment