அடையாறு, செப் 7: அடையாறு பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 43-வது ஆண்டு தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 7-ஆம் தேதியான இன்று 9ஆம் திருவிழா மிகச் சிறப்பாக ஏற்பாட செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவை தருமபுரி மறைமாவட்ட ஆயர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த ஆண்ட திருவிழாவிற்காக கட்டப்பட்ட 75 அடி உயரமுள்ள புதிய கொடிமரத்தில் வேளாங்கண்ணி அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். இதையடுத்து சிறப்பு கூட்டு திருப்பலி நடைப்பெற்றது. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த 8 நாட்களும் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயர்களும், குருக்களும் கலந்துக் கொண்டு திருப்பலி நிறைவேற்றினர். 8-ஆம் திருவிழாவான நேற்று நற்கருணை விழா சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஏ.எம்.சின்னப்பா அவர்கள் தலைமை வகித்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.
செப்டம்பர் 7-ஆம் தேதியான இன்று ஆலயத் திருவிழாவின் சிறப்பம்சமாக தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதனை செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமை ஏற்று சிறப்பு கூட்டு திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 4.30 மணியளவில் சென்னை மறைமாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களை சேர்ந்த சிறுவர்கள் எலியட்ஸ் கடற்கரையிலிருந்து ஆலயத்தை நோக்கி பவனியாக வந்தனர். அவர்கள் ஆலயத்தை வந்தடைந்ததும் நற்கருணை பவனியாக கடற்கரை வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. சிறிது நேரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தேர் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தின் முகப்பு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு திருப்பலி நிறைவேறியதும், திருத்தேர் ஆசிர்வதிக்கப்பட்டு பின்பு பவனியாக எடுத்து செல்லப்பட்டது.
இதனை காண சென்னை மட்டுமல்லாமல் பல்வெறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடல் அலையென ந்தனர். கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பேருந்துகள் வழிமாற்றம் செய்துவிழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் அடையாறுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆலயத்தின் உள்ளேயும், சுற்றுப்புற வளாகத்திலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் திவீரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment