Tuesday, September 8, 2015

குட்டி பிரேசில் என்று அழைக்கப்படும் வியாசர்பாடி முல்லை நகர்.







வியாசர்பாடி செப் 7: சமுகத்தால் ஒடுக்கப்பட்டு சரியான கல்வி கற்பித்தலும், திறமைகள் இருந்தும் கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு வெளியில் சென்று பயிற்சி எடுக்கும் அளவு பொருளாதார வசதியில்லாதா ஏழை குழந்தைகளுக்கு உதவும் எண்ணத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவது சென்னை மாநகராட்சி முல்லைநகர் கால்பந்து மைதானம்.
திறமைகள் இருந்தும் வெளி இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதால் தாழ்த்தப்படட சமுகத்தை சேர்ந்த குழந்தைகளை ஊக்குவிக்கும் வகைளில் இந்த முல்லை நகர விளையாட்டு மைதாம் செயல்ப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்த மைதானத்தின் பொருப்பாளர் ஒருவர் கூறியதாவது:
“நமது தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்த குழந்தைகளுக்கு கல்வி முறையான கல்வியும், விளையாட்டு பயிற்சியும் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே அவர்களுக்காக செயல்படும் இந்த கால்பந்தாட்டு அமைப்பு மூலம் நமது பகுதியில் பல திறமைசாலிகளை கண்டுபிடித்து கல்வி பயில அவர்களை ஊக்குவித்தல், அவர்கள் திறமையாக உள்ள விளையாட்டுகளை அறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். முன்பெல்லாம் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பல குழந்தைகள் திசை மாறி சென்றனர். பல குழந்தைகளின் வாழ்வியல் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த பகுதியை சார்ந்த பல குழந்தைகள் தேசிய அளவிலும், மாநில, மாவட்ட அளவிலும் பெரும் சாதனைகளை நிகழ்த்தும் கால்பந்தாட்ட வீரர்களாக உள்ளனர். இந்த பகுதியை குட்டி பிரேசில் என்றே அழைப்பார்கள். ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். மீன் வியாபாரி ஒருவரின் மகளான சதீஷ்வரி எனும் மாணவி தேசிய அளவிளான காலபந்தாட்ட அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும் இங்கு பயற்சி பெற்ற 18 பேர் தேசிய அணிக்காக விளையாடியவர்கள்.
இந்த மைதானம் தற்போது தான் சீரமைக்கப்பட்டு செயற்கை புல் தரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மண் தரையாக தான் இருந்தது பல ஆண்டு போராடடம் மற்றும் முயற்சி பின் சென்னை மாநகராட்சி தான் இதனை இப்பகுதி மக்களுக்கா செய்து கொடுத்துள்ளது. மேலும் இங்கு பயிற்சி பெறும் சிறுவர்கள் பலரின் பெற்றோர்கள் ஆட்டோ, ரிக்ஷா, மாட்டுவண்டி ஓட்டு முறைசாரா தொழிலாளர்கள் ஆவர். அதனால் பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்தான உணவுகள் கிடைப்பதல்லை. எனவே இதுகுறித்து மேயரிடம் கூறியுள்ளோம்.” என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment