ஆவடி-செங்குன்றம் வரையிலான போக்குவரத்து நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கும் பணி துரிதமாக நடைப்பெற்று வருகிறது.
செங்குன்றம் தொடங்கி புழல், சூரப்பேடு, ஒரகடம், அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி வரையிலான போக்குவரத்து நெடுஞ்சாலையின் நடுவே போக்குவரத்து நெடுஞ்சாலை துறையினரால் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. புழலிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையிலும், அம்பத்தூரிலிருந்து ஆவடி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் சாலையிலும் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்கள் வளைவில் திரும்பும் பொழுதும், பள்ளி குழந்தைகள் சாலையை கடக்கும் பொழுதும் பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. அதுமட்டுமில்லாமல் சாலையில் சில நேரங்களில் நிலை தடுமாறும் வாகனங்கள் எதிர் வழியில் வரும் வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகிறது.
இதனால் போக்குவரத்து நெடுஞ்சாலை துறையின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்போது இதன் பணி மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்த தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினால் மக்களுக்கு நன்மையே அதிகம் என்றாலும் அசவுகரியமும் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதாவது சாலையை கடப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதாகவும் அதே போல் வாகனத்தில் செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகின்றனர். இவை எல்லாம் ஒரு புறமிருக்க மற்றொரு புறம் சாலை தடுப்புச்சுவரின் தரம் மிக மட்டமாக இருப்பதாகவும், சிறு வாகனங்கள் லேசாக மோதினாலே இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும், அதிகாரிகள் இப்பணியை மேம்போக்காக செய்கிறார்கள் எனவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Monday, September 21, 2015
செங்குன்றம்-ஆவடி சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment