Tuesday, September 22, 2015

வியாசர்பாடியின் மறுமுகம்

வியாசர்பாடி! என்ற பெயரை கேட்டதும் முதலில் நம் நினைவிற்கு வருவது வடசென்னை, பின் கொலை, கொள்ளை… என்று அதன் ஒரு முகம் மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அதன் மறுமுகம் பற்றிய விவரம் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. இதன் ஒருமுகம் கொள்ளை, கொலை என்று பார்த்தால் மற்றொரு முகம் கல்வி, விளையாட்டு, சமூக கூடம் என்று பெரிதளவில் வளர்ந்து வருகிறது. இங்குள்ள இளைஞர்கள் மதுபழக்கத்தில் இருந்து மீண்டு தங்களை கால்பந்து, குத்து சண்டை போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். காரணம் இங்குள்ள சமூகக்கூடங்கள்… இக்கூடங்களில் இளைஞர்களிடம் மதுவினால் வரும் தீய விளைவுகளை கூறியும் அதன் பாதிப்புகளை உணர்த்தியும் சிகாமணி என்பவர் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். மேலும் இங்கு குழந்தைகள் படிப்பதற்கு கல்வி தொகை, பெண்களுக்கு தையல்பயிற்சி போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்..
ஆர்வம் சமூக கூடம்
       ஆர்வம் சமூக கூடத்தின் உரிமையாளர் சிகாமணி. இக்கூடம் சுமார் 12 வருடங்களாக இயங்கி வருகிறது. இதன் தொடக்கத்தின் காரணம் இங்குள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கவும், மதுப்பழக்கத்தில் உள்ளவர்களை மீட்கவும் பின் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்காகவும் மேலும் குறிப்பாக ஆதரவற்றவர்களுக்கும் இக்கூடம் உதவுகிறது. ஆர்வம் இங்குள்ள அடிதட்டு குடும்பத்தை சேர்ந்த குழந்தை மற்றும் இளைஞர்களுக்கு கால்பந்து மற்றும் குத்துசண்டை பயிற்சி அளித்து தேசிய அளவில் பங்கு பெற பெரிதளவில் உதவுகிறது. குறிப்பாக இங்கு பெண்கள் மற்றும் குடும்ப தலைவிகளுக்கும் இலவசமாக தையல் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலையும் அளிக்கிறார்கள். இதனால் பெண்கள் தங்கள் சுயமாக வேலை கற்றுக் கொண்டு தாமாகவே சுய தொழில் செய்கிறார்கள். கடந்த வாரம் இதன் 12ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதன் செயல் வடசென்னை முழுவதும் நன்மையை விளைவிக்கிறார்கள்.
கால்பந்து குழு
    இங்கு டாக்டர். அம்பேத்கர் எஸ் .எம். கிளப் என்ற ஓர் கால்பந்தாட்ட குழு இக்கூட்டத்தின் கீழ் செயல் பட்டு வருகிறது. இக்குழுவில் உள்ள பல இளைஞர்கள் தேசிய அளவில் பங்கு பெற்று பல பரிசுகளையும், விருதுகளையும் குவித்துள்ளனர்.
                                           

No comments:

Post a Comment