Tuesday, September 8, 2015

மூன்றுஆண்டுகளாகமுடியநிலையில் இருக்கும் கொரட்டூர் இரயில்வேகேட்





கொரட்டூர், செப்7: கொரட்டூர் இரயில் நிலையம் அருகே வாகனங்களுக்கான சுரங்கப் பாதை அமைப்பதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் இரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது.
                கொரட்டூரை இரண்டாக பிரிக்கும் வகையில் உள்ளது கொரட்டூர் இரயில் நிலையம். கொரட்டூரின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளை இணைக்கு வகையில் அமைந்தது கொரட்டூர் இரயில்வே நடைபாதை. கடந்த சில ஆண்டுகளாக இந்த கேட் மூடிய நிலையிலே உள்ளது. இதனால் கொரட்டூர் பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்கு வசிக்கும் வசந்தன் என்பவர் கூறியதாவது:
                “நான் கொரட்டூரின் வடக்கு பக்கத்தியிலிருந்து தென் பகுதியில் உள்ள எனது அலுவலகத்திற்கு செல்ல குறைந்தது 5 கிலோமீட்டர் மேடும் பள்ளமான ரோட்டில் சுற்றிவர வேண்டியுள்ளது. ஆனால் அந்தபகுதி மூடியுள்ளகேட் வழியாக சென்றால் வெறும் அரை கிலோ மீட்டர் தான் வரும். இதனால் நான் எனது காரை கொரட்டூர் இரயில் நிலையத்தில் அருகே நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து செல்ல வேண்டியுள்ளது. சில சமயங்களில் சொந்த வாகனம் இருந்தும் ஆட்டோவிற்கு பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது.
                இதுகுறித்து பாலம் கட்டும் தொழிலாளர்கள் சார்பில் கூறியதாவது:
                “நாங்களும் பல மாதங்களாக வேலையில் ஈடுபட்டு கொண்டு தான் உள்ளோம். ஆனால் இது சுரங்க வழி சாலை என்பதால் 30 அடி ஆழம் வெட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுரங்க பாதை வேலையை விரைந்து முடிப்பதில் மந்தை நிலை உள்ளது. மேலும் இந்த வேலை நடைபெறும் பகுதிக்கு மிக அருகில் கழிவு நீர் கால்வாய் இருப்பதால் அந்தநீரும் அடிக்கடி பள்ளதினும் தேங்கிவிடுகிறது. தற்போதும் வரப்போவது மழைக்காலம் என்பதால் ஓரளவுக்கு வேலையை விரைந்து செய்து வருகிறோம்.

                இந்த இரயில்வே பாதை முடியிருப்பதால் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடிகிறது. அதுவும் சில நேரங்களில் இரண்டு மூன்று இரயில்கள் ஒரேநேரத்தில் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. கொதுமக்கள் பலர் அரசு இங்கே மேம்பாலம் கட்டியிருக்கலாம். சுரங்கபாதை அமைப்பதால் தான் வேலை தாமதமாக நடைப்பெறுகிறது என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment