வறுமையால் புத்தகம் விற்க்கும் சிறுமி.
வீட்டின் வறுமை காரணமாக விடுமுறை நாட்களை பெசன்ட் நகர் கடற்கரையில் புத்தகம் விற்று படிக்கும் சிறுமி.
சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வீட்டு வேலை செய்பவர் காயத்ரி இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது, இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் குடும்ப செலவுக்காக வீட்டு வேலை செய்து வருகிறார்,இவரது மகள் லட்சுமி (11) திருவள்ளூரில் உள்ளஅரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் வீட்டின் குடும்ப வறுமையை தனது தாயை பார்த்து உணர்ந்து லட்சுமி படித்துக் கொண்டே விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரையில் சிறு சிறு புத்தகங்கள் விற்று வருகிறார்.திருவள்ளூரிலிருந்து இரயில் மூலம் பெசண்ட் நகர் கடற்கரைக்கு வந்து செல்கிறார். ஒரு நாளைக்கு 100 முதல் 200 ரூபாய் வரை சம்பாதித்து அதை அம்மாவிடம் கொடுத்து உதவி வருகிறார்.அதில் 10ரூபாய் தனது செலவுக்கு எடுத்து கொள்கிறார்.மேலும் நான் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்றும் என்னை போன்ற ஏழைப் பிள்ளைகளுக்கு கல்விக்கு உதவ வேண்டும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment