தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.
சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639–ம் ஆண்டு ஆகஸ்டு 22–ந் தேதியை நினைவுகூரும் வகையில் தற்போது 376–வது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம். இதனைக் கொண்டாடும் விதமாக எல் டம்ஸ் சாலையில் உள்ள C.P ART CENTRE -ல் புகைப்படக் கண்காட்சி நடைப்பெற்று வருகிறது.இங்கு சென்னைப் பற்றியான பழமையான கட்டிடங்கள்
சென்னையில் உள்ள ராணிமேரி கல்லூரி, மாநில கல்லூரி உள்பட பல்வேறு பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் சாந்தோம் தேவாலயம் போன்றவற்றின் புகைப்படங்களுடன் வரலாற்று தகவல்கள் மற்றும் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் வரலாற்று தகவல்களும் சென்னையின் பழமையான மேப் சென்னை மாநகர் தொடர்பான அபூர்வ புகைப்படங்கள் மற்றும் ஆங்கிலேயர் பயன்படுத்திய போர் தளவாடங்கள் உள்பட பல்வேறு பொருட்களை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை தினமும் 100க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பார்வையிடுகின்றனர். இப்புகைப் பட கண்காட்சி ஆகஸ்ட் 21 முதல் 28 வரை நடைப்பெறுகின்றது.

No comments:
Post a Comment