Monday, December 14, 2015

கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட மக்களின் அவதி


சென்னை,14
     சென்னை சத்தியா நகரில் ஏறத்தாழ 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் குடிசைவாழ் மக்கள் சில வாரங்களுக்கு முன்பு பெய்த கடும் மழையினால் மக்கள் தங்களின் குடிசைகளை  இழந்து நிற்கின்றனர். கற்பினிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.
    அவர்களுக்கு போதுமான வசதி இல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். வீட்டுக்குள் வந்த மழை ரை மோட்டார் இயந்திரங்களைக் கொண்டு  தண்ணீரை வெளியேற்றினர். ஒரு சில தலைவர்கள் வந்து பாதிக்கப்பட்ட மக்களை கணக்கெடுத்துச் சென்றனர். இவர்கள் உடைமைகளை மீண்டும் செய்து தருவதாக கூறினார்கள். குடிசைவாழ் மக்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர்.
    இன்னிலையில், சத்தியா நகரில் உள்ள சமுதாய கூடமானது சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்கும் இடமாக இருந்தது. மழைக்கு பின்பு சமுதாயகூடத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சுவரில் விரிசல் ஏற்பட்டு எ  லையில் வேண்டுமானாலும் தொய்ந்து விழும் நிலை உள்ளதால் மக்கள் குழந்தைகளை அந்த சமுதாயக் கூட்த்துக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளனர். அரசாங்க அதிகாரிகள் அவர்கள் இருக்கும் இடத்தை பாரத்து விட்டு அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக கூறிச்சென்றுள்ளனர்

    தற்போது தேங்கி நின்ற தண்ணீர்களை மோட்டர் இயந்திரங்களைக் கொண்டு வெளியேற்றினர் சேதம் ஏற்பட்ட இடங்களை முழுவதுமாக சரிசெய்யப்படவில்லை. இதனால், குழந்தைகளுக்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களும் பரவி வருகின்றனர்.






No comments:

Post a Comment