Monday, December 14, 2015

மழை விட்டும் சோகம் தீரவில்லை


வியாசர்பாடி: கடந்த ஒருவாரமாக கொட்டிதீர்த்த  கனமழையால் மிகுந்த பாதிப்படைந்த வியாசர்பாடி இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால் அப்பகுதி மக்கள் மிருந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த வாரம் சென்னையில் கொட்டிதீர்த்த கனமழையில் வடசென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில்  மூழ்கின. குறிப்பாக வியாசார்பாடிப் பகுதியைச் சேர்ந்த முல்லை நகர், சத்தியமூர்த்தி நகர், சாமந்தி பூ காலனி, கல்யாணபுரம்  மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பபுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அருகிலிருந்த நிவாரண முகாம்களில் உறவினர்கள் வீட்டிலும் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில்  வெள்ளநீர் பல இடங்களில் வடிந்துள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இன்றளவும் வெள்ளநீர் குடியிருப்பைச் கூழ்ந்துள்ளன். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதி வாழ் மக்களுக்கு அரசின் எவ்வித நிவாரணமும் சலுகையும் இன்றளவும் வரை கிடைக்கவவில்லை சில தன்னார்வ அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் கொண்டு வரும் நிவாரணப் பொருட்களும் அப்பகுதியின் முற்புறங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதனால் உட்பகுதிவாசிகளுக்கு எவ்வித சலுகையும் கிடைக்காமல் போகின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சாமந்தி பூ காலனி, நேரு காலனி, முல்லை நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்த மழையால் வீடுகளை வெள்ளநீருடன் கழிவு நீரும் சூழ்ந்துவிட்டது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவரவர் வீட்டு கழிப்பறையைக் கூட பயன்படுத்த இயலாத அவலத்திற்கு ஆளாக்கியுள்ளனர். மேலும், இப்பகுதியில் பெரும்பாலான வீடுகளில் கதவு இல்லாத காரணத்தால் திருட்டு பயம் காரணமாக மக்கள் அருகிலிருக்கும் முகாம்களில் கூட தங்க முடியயாத நிலையில் உள்ளனர். முகாம்கள் மற்றும் உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் வீடுகளுக்குத் திரும்ப இயலாத நிலையில் உள்ளனர். மேலும் இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரால் தொற்று நோய் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது மழை நின்று  ஒரு வாரமாகியும், எந்த ஒரு அரசியல் கட்சிகளும் மாவட்ட நிர்வாகிகமும் கண்டு கொள்ளவில்லை என்றானர்.
மழையினால் சாக்கடை நீர் புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பகுதியில் மாநகராட்சி உடனடியான நடவாடிக்கை வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.






No comments:

Post a Comment