Monday, December 14, 2015

மெல்ல இயல்புநிலைக்கு திரும்பும் கோட்டூர்புரம

மெல்ல இயல்புநிலைக்கு திரும்பும் கோட்டூர்புரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக செம்பரபாக்கம் அணை திறந்து விடப்பட்டத்தில் சென்னை கோட்டூர்புரம் அதிகம் பாதிக்கப்பட்டது.குறிப்பாக வீட்டின் முதல் தளம் வரை மழைநீர் புகுந்தது.இந்த மழையின் கோரத்தாண்டவத்தால் ஏழை நடுத்தர மற்றும் வசதி உள்ளவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.தற்போது மழைநீர் வடிந்துள்ளாதால் அப்பகுதிமக்கள்இயல்புநிலைக்கு திரும்பிள்ளனர் தற்போது அந்தபகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசால் இலவச மருத்துவமுகாம் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க குப்பைதொட்டி போன்றபகுதிகளில் பிளிச்சிங் பவுடர் மற்றும் கொசு மருந்து போன்ற பணிகள் நடைப்பெற்றுவருகின்றன.மருத்துவரிடம் என்னென்ன நோய்களுக்கு மருந்து  வழங்கபடுகிறது குறித்து பேசிய போது காய்ச்சல் சளி மற்றும் அதிகமாக சேற்றுபுண் போன்றவற்றிற்க்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன.குறிப்பாக குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் இருக்க தடுப்பூசி போடப்படுவதுமாக மருத்துவர் கூறினார்.மேலும் அந்த பகுதியில் கொசு மருந்து அடிப்பவரிடம் பேசும் அவர் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து தற்காலிகமாக இந்த பணிக்காக வரவலைக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோன்று தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆட்கள் வந்திருப்பதாகவும் ஒரு வாகனத்திற்கு ஆறு நபர்கள் அதில் பூச்சி ஆய்வாளர்கள் உடன் இருப்பதாகவும் கூறினார்.இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது மழைநீர் அதிகம் வந்த போது தமிழக அரசு சார்பில் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்றவைதான் அதிக நிவாரண உதவிகள் வழங்கியதாக கூறினார்கள்.மேலும் தாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் குறிப்பாக ரேசன் கார்டு பிள்ளைகளின் புத்தகங்கள் சான்றிதழ்கள் என எல்லாவற்றையும் இழந்து நிற்பதாக கவலை தெரிவித்தனர்.எனவே தமிழக அரசு நிவாரணத் தொகை அதிகம் வழங்க வேண்டும் என்றும் ரேசன் கார்டு சான்றிதழ்கள் போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தாங்கள் இயல்புநிலைக்கு திரும்ப வெகு நாட்கள் ஆகும் என்று சோகத்துடன் கூறினார்கள்.

No comments:

Post a Comment