சிந்தாதிரிப்பேட்டை: சென்னையில் கன மழையின் கோரதாண்டவம் முடிந்து ஒரு வாரம் ஆன பின்னும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. பலதரப்பட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்பி கொண்டிருந்தாலும் சிந்தாதிரிப்பேட்டையின் கலவைசெட்டி தெரு மக்களின் வாழ்க்கை இன்னும் ரணம் நிறைந்ததாகவே தான் மாறியிருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறையவாது தங்கள் வாழ்விடங்களை இழந்து தான் நிற்கிறார்கள் இப்பகுதி மக்கள். சின்ன மழைக்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கொள்ளும் நிலைதான் இன்றும் இருக்கிறது. அப்படிப்பட்ட பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு வீடுகளை மாற்றி தரக்கோரி தொடர்ந்து பன்னிரண்டு வருடங்களாக போராடி கொண்டிருக்கின்றோம்.
சமீபத்தில் பெய்த மழை இப்பகுதி மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது. மழை முடிந்த ஒரு வாரம் ஆன பின்னும் வீடுகளுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதுவும் சாக்கடை நீராக. சமுதாயத கூடத்தில் தங்கியிருந்த மக்கள் தன்னர்வலர்கள் மற்றும் மாணவர்களின் உதவியால் உணவு வழங்கப்பட்டு உடையும் கொடுக்கப்பட்டு வந்தது.
இப்போது அதற்கும் வழியில்லாமல் சாலைகளில் தவித்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து எழிலரசன் என்ற மாணவர் கூறுகையில், “இதுவரை நிறைய தொலைகாட்சி நிறுபர்கள் வந்து பேட்டி எடுத்து சென்றுவிட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மழை எங்கள் வாழ்வையே மாற்றிவிட்டது. நான் சென்னை மாநில கல்லூரியில் இளங்கலை வரலாறு இரண்டாமாண்டு படித்து கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்து சென்று விட்டது.
என் சான்றிதழ்கள் எல்லாம் பறிபோய் விட்டன. நாளையிலிருந்து எனக்கு தேர்வு தொடங்குகிறது. ஆனால் கல்லூரிக்கு போட்டு செல்லக்கூட என்னிடம் உடைகள் ஏதும் இல்லை” என்று கூறினார்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த பாலு எனும் கூலி தொழிலாளி கூறுமையில்:
பக்கத்து தெருவில் தான் எங்கள் பகுதி கவுன்சிலர் வசிக்கிறார். ஆனால் இவரை என்னவென்று கூட எட்டி பார்க்கவில்லை.
அரசாங்க பள்ளிகளில் தங்க வைக்கப்பட்ட மக்கள் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வீதியோரங்களில் பழைய பேனர்களை விரித்து தங்கியுள்ளனர். பள்ளிகளும் கல்லூரிகளும் திறந்துவிட்ட நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பல மாணவர்கள் தங்கள் பாட புத்தகங்களை மழையில் பறிகொடுத்துவிட்டு தவிக்கிறார்கள். இவர்களின் சாகன்றிதழ்கள் பலவும் அடித்து சென்று விட்டன. மேலும் தன்னார்வலர்களும் மாணவ அமைப்பினரும் உதவி செய்யாமல் இருந்திருந்தால் தங்களின் நிலை இன்னும் மோசமாக சென்றிருக்கும். இத்தனை நாட்கள் ஆகியும் அரசிடமிருந்தும் அரசு அதிகாரிகளிடமதிருந்தும் எந்த ஒரு உதவியும் வந்து சேரவில்லை. கண்ணகி நகரிலும் எழில் நகரிலும் அரசு மாற்று குடியிருப்பு இருப்பதாக கூறி அங்கு தங்க வைப்பதகா கூறி எழுதி வாங்கி சென்றனர். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அரசு அறிவித்த நிவாரண தொகையும் எங்களை வந்து சேரவில்லை. இப்பகுதியில் பெண்கள் எல்லாம் கழிப்பறைக்கூட இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்” என்று கூறினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசாங்கம் கண்டிப்பாக நடடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment