Monday, December 14, 2015
கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட மக்களின் அவதி
Business in T. Nagar Bridge still operating under flooded
மழை விட்டும் சோகம் தீரவில்லை
வியாசர்பாடி: கடந்த ஒருவாரமாக கொட்டிதீர்த்த கனமழையால் மிகுந்த பாதிப்படைந்த வியாசர்பாடி இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால் அப்பகுதி மக்கள் மிருந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த வாரம் சென்னையில் கொட்டிதீர்த்த கனமழையில் வடசென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக வியாசார்பாடிப் பகுதியைச் சேர்ந்த முல்லை நகர், சத்தியமூர்த்தி நகர், சாமந்தி பூ காலனி, கல்யாணபுரம் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பபுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அருகிலிருந்த நிவாரண முகாம்களில் உறவினர்கள் வீட்டிலும் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் வெள்ளநீர் பல இடங்களில் வடிந்துள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இன்றளவும் வெள்ளநீர் குடியிருப்பைச் கூழ்ந்துள்ளன். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதி வாழ் மக்களுக்கு அரசின் எவ்வித நிவாரணமும் சலுகையும் இன்றளவும் வரை கிடைக்கவவில்லை சில தன்னார்வ அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் கொண்டு வரும் நிவாரணப் பொருட்களும் அப்பகுதியின் முற்புறங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதனால் உட்பகுதிவாசிகளுக்கு எவ்வித சலுகையும் கிடைக்காமல் போகின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சாமந்தி பூ காலனி, நேரு காலனி, முல்லை நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்த மழையால் வீடுகளை வெள்ளநீருடன் கழிவு நீரும் சூழ்ந்துவிட்டது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவரவர் வீட்டு கழிப்பறையைக் கூட பயன்படுத்த இயலாத அவலத்திற்கு ஆளாக்கியுள்ளனர். மேலும், இப்பகுதியில் பெரும்பாலான வீடுகளில் கதவு இல்லாத காரணத்தால் திருட்டு பயம் காரணமாக மக்கள் அருகிலிருக்கும் முகாம்களில் கூட தங்க முடியயாத நிலையில் உள்ளனர். முகாம்கள் மற்றும் உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் வீடுகளுக்குத் திரும்ப இயலாத நிலையில் உள்ளனர். மேலும் இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரால் தொற்று நோய் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது மழை நின்று ஒரு வாரமாகியும், எந்த ஒரு அரசியல் கட்சிகளும் மாவட்ட நிர்வாகிகமும் கண்டு கொள்ளவில்லை என்றானர்.
மழையினால் சாக்கடை நீர் புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பகுதியில் மாநகராட்சி உடனடியான நடவாடிக்கை வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
அரசின் உதவியின்றி தவிக்கும் கூவம் கரையோர மக்கள்
சிந்தாதிரிப்பேட்டை: சென்னையில் கன மழையின் கோரதாண்டவம் முடிந்து ஒரு வாரம் ஆன பின்னும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. பலதரப்பட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்பி கொண்டிருந்தாலும் சிந்தாதிரிப்பேட்டையின் கலவைசெட்டி தெரு மக்களின் வாழ்க்கை இன்னும் ரணம் நிறைந்ததாகவே தான் மாறியிருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறையவாது தங்கள் வாழ்விடங்களை இழந்து தான் நிற்கிறார்கள் இப்பகுதி மக்கள். சின்ன மழைக்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கொள்ளும் நிலைதான் இன்றும் இருக்கிறது. அப்படிப்பட்ட பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு வீடுகளை மாற்றி தரக்கோரி தொடர்ந்து பன்னிரண்டு வருடங்களாக போராடி கொண்டிருக்கின்றோம்.
சமீபத்தில் பெய்த மழை இப்பகுதி மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது. மழை முடிந்த ஒரு வாரம் ஆன பின்னும் வீடுகளுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதுவும் சாக்கடை நீராக. சமுதாயத கூடத்தில் தங்கியிருந்த மக்கள் தன்னர்வலர்கள் மற்றும் மாணவர்களின் உதவியால் உணவு வழங்கப்பட்டு உடையும் கொடுக்கப்பட்டு வந்தது.
இப்போது அதற்கும் வழியில்லாமல் சாலைகளில் தவித்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து எழிலரசன் என்ற மாணவர் கூறுகையில், “இதுவரை நிறைய தொலைகாட்சி நிறுபர்கள் வந்து பேட்டி எடுத்து சென்றுவிட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மழை எங்கள் வாழ்வையே மாற்றிவிட்டது. நான் சென்னை மாநில கல்லூரியில் இளங்கலை வரலாறு இரண்டாமாண்டு படித்து கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்து சென்று விட்டது.
என் சான்றிதழ்கள் எல்லாம் பறிபோய் விட்டன. நாளையிலிருந்து எனக்கு தேர்வு தொடங்குகிறது. ஆனால் கல்லூரிக்கு போட்டு செல்லக்கூட என்னிடம் உடைகள் ஏதும் இல்லை” என்று கூறினார்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த பாலு எனும் கூலி தொழிலாளி கூறுமையில்:
பக்கத்து தெருவில் தான் எங்கள் பகுதி கவுன்சிலர் வசிக்கிறார். ஆனால் இவரை என்னவென்று கூட எட்டி பார்க்கவில்லை.
அரசாங்க பள்ளிகளில் தங்க வைக்கப்பட்ட மக்கள் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வீதியோரங்களில் பழைய பேனர்களை விரித்து தங்கியுள்ளனர். பள்ளிகளும் கல்லூரிகளும் திறந்துவிட்ட நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பல மாணவர்கள் தங்கள் பாட புத்தகங்களை மழையில் பறிகொடுத்துவிட்டு தவிக்கிறார்கள். இவர்களின் சாகன்றிதழ்கள் பலவும் அடித்து சென்று விட்டன. மேலும் தன்னார்வலர்களும் மாணவ அமைப்பினரும் உதவி செய்யாமல் இருந்திருந்தால் தங்களின் நிலை இன்னும் மோசமாக சென்றிருக்கும். இத்தனை நாட்கள் ஆகியும் அரசிடமிருந்தும் அரசு அதிகாரிகளிடமதிருந்தும் எந்த ஒரு உதவியும் வந்து சேரவில்லை. கண்ணகி நகரிலும் எழில் நகரிலும் அரசு மாற்று குடியிருப்பு இருப்பதாக கூறி அங்கு தங்க வைப்பதகா கூறி எழுதி வாங்கி சென்றனர். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அரசு அறிவித்த நிவாரண தொகையும் எங்களை வந்து சேரவில்லை. இப்பகுதியில் பெண்கள் எல்லாம் கழிப்பறைக்கூட இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்” என்று கூறினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசாங்கம் கண்டிப்பாக நடடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
After severe flooding, T Nargar slowly gets back business
T Nargar in the flood - Source: Thehindu.com |
T Nargar before the flood |
மெல்ல இயல்புநிலைக்கு திரும்பும் கோட்டூர்புரம
மெல்ல இயல்புநிலைக்கு திரும்பும் கோட்டூர்புரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக செம்பரபாக்கம் அணை திறந்து விடப்பட்டத்தில் சென்னை கோட்டூர்புரம் அதிகம் பாதிக்கப்பட்டது.குறிப்பாக வீட்டின் முதல் தளம் வரை மழைநீர் புகுந்தது.இந்த மழையின் கோரத்தாண்டவத்தால் ஏழை நடுத்தர மற்றும் வசதி உள்ளவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.தற்போது மழைநீர் வடிந்துள்ளாதால் அப்பகுதிமக்கள்இயல்புநிலைக்கு திரும்பிள்ளனர் தற்போது அந்தபகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசால் இலவச மருத்துவமுகாம் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க குப்பைதொட்டி போன்றபகுதிகளில் பிளிச்சிங் பவுடர் மற்றும் கொசு மருந்து போன்ற பணிகள் நடைப்பெற்றுவருகின்றன.மருத்துவரிடம் என்னென்ன நோய்களுக்கு மருந்து வழங்கபடுகிறது குறித்து பேசிய போது காய்ச்சல் சளி மற்றும் அதிகமாக சேற்றுபுண் போன்றவற்றிற்க்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன.குறிப்பாக குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் இருக்க தடுப்பூசி போடப்படுவதுமாக மருத்துவர் கூறினார்.மேலும் அந்த பகுதியில் கொசு மருந்து அடிப்பவரிடம் பேசும் அவர் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து தற்காலிகமாக இந்த பணிக்காக வரவலைக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோன்று தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆட்கள் வந்திருப்பதாகவும் ஒரு வாகனத்திற்கு ஆறு நபர்கள் அதில் பூச்சி ஆய்வாளர்கள் உடன் இருப்பதாகவும் கூறினார்.இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது மழைநீர் அதிகம் வந்த போது தமிழக அரசு சார்பில் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்றவைதான் அதிக நிவாரண உதவிகள் வழங்கியதாக கூறினார்கள்.மேலும் தாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் குறிப்பாக ரேசன் கார்டு பிள்ளைகளின் புத்தகங்கள் சான்றிதழ்கள் என எல்லாவற்றையும் இழந்து நிற்பதாக கவலை தெரிவித்தனர்.எனவே தமிழக அரசு நிவாரணத் தொகை அதிகம் வழங்க வேண்டும் என்றும் ரேசன் கார்டு சான்றிதழ்கள் போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தாங்கள் இயல்புநிலைக்கு திரும்ப வெகு நாட்கள் ஆகும் என்று சோகத்துடன் கூறினார்கள்.
Chennai schools reopened after the deluge
Front wall space of the Avvai school of Adyar |
As the school had received 95% of attendance, say Headmistress, Sivaranjini. N |
Inside view of a classroom as schools in Chennai reopened on Monday |
storm water drains were being misused by people
“The roads have not been laid for the past six years and have been dug up for a multitude of reasons for at least four times till date. There are no roads; they are only paths for trekking.”
He said, “We park our cars at the end of the roads because the roads are barely motorable. Our essential stuff like car tyres go missing due to this and the maintenance cost of four wheelers has increased too.” The roads, though leveled, have become potholed and slushy due to the recent rains in Alapakkam main road. Water has entered houses and vehicles got submerged in the rain water. "We lost all our valuable items and have only managed to save our lives," said Sam, a Chennai resident. Proper draining out system has to be laid on sides of the road considering the level flow, and proper connecting the lakes / rivers into sea has to be done if require by removing certain constructions constructed on the lake / river bed areas.
As everyone's responsibility, we should stop using plastic bags, and stop through plastic bags on road side and canals said by Gopi chander, a resident of Chennai. The 9 Street is misused by traders for dumping poultry wastes and meat. The damage caused by the rain was severe on these streets as they were already in a pitiable condition. The existing storm water drains were demolished to build new ones and the roads were dug up some years back.
Unfortunately, the debris was dumped right in the middle and the roads were not laid again.All that remains now are roads with potholes and bumpy rides, making life difficult for the residents of this area.People said that the storm water drains were being misused to let out their domestic sewage.