மீனவர்களின் ஆதங்கம்,குடியிருப்பில் இருந்து
வெளியேறிய மீனவர்கள்
சென்னை கலங்கரை விளக்கத்தில் உள்ள
நொச்சிக்குப்பம்,டுமில்குப்பம்,பட்டினப்பாக்கத்தில் உள்ள சாலைகளில்
விரிவுபடுத்த,அந்த சாலையோரங்களில் உள்ள மீன் தொழிளாலர்களையும் அந்த சாலையை ஒட்டியுள்ள குடியுருப்பில்
இருக்கும் மக்களையும் வேறு இடம் பெயர உத்திரவிட்டுள்லதாகவும்,புதிய மீன்
மார்க்கெட் உருவாக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இதனால் குடியிருப்பில்
இருந்து வெளியேறிய மீனவர்கள் பெரும் தவிப்பில் இருப்பதாக அவர்களுள் ஒரு மீனவர்
கூறிப்பிட்டுள்ளர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் மீனவர்கள்
வசித்து வருகின்றனர்.அவர்களின் வாழ்வாதாரம் மீன்
பிடித்தல். இவற்றை விற்பனை செய்தல்
போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த மார்ச் எட்டாம் தேதி
அன்று லைட் அவுஸ் பகுதியில் உள்ள மெரீனா இருப்பு பாதையில் மீன் கடைகள்
வைத்திருப்பவர்களிடம் அதாவது கார்பரேஷ்ன்ஓர்கர்ஸ்,மற்றும் அங்கு தினமும்
வைத்திருக்கும் மீன் கடைகள் போன்றவற்றை அப்புறப்படுத்துமாறு மாநகர அரசு
உத்திரவிட்டுள்ளது.காரணம் மெரீனா லூப் ரோடு போடுவதற்காக ரூபாய் 47.5 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது.நீண்ட நாட்களாக மீன்
கடை வைத்திருந்த மீனவர்களுக்கு சிறிது நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.
தமிழ்நாடு சிலம் ஏரியாக்களில்
நொச்சிக்குப்பம்,டுமில்குப்பம்,பட்டினப்பாக்கம்போன்றவை உள்ளன.இந்த ஏரியாக்களில்
631 குடும்பங்கள் நொச்சிக்குப்பம்,டுமில்குப்பத்தில் வாழ்ந்து வருகின்றனர்.இப்பகுதியில்
வசித்த மக்கள் தற்போது கண்ணகி நகர் பகுதியில் குடிபெயர்ந்துள்ளதாக
கூருகின்றனர்.மற்றவர்கள் அப்பகுதியிலே கடற்கரை பகுதியில் குடியில் போட்டு
வசிக்கின்றனர்.இவை பற்றி அவர்களிடம் கேட்டபோது நாங்கள் கடந்த 45 வருடங்களாக
இப்பகுதியில் வசித்து வருகிறோம்.திடிரென எங்களை போக சொன்னால் எங்கு
செல்வது.வீடுகள் வாடைகைக்கு வங்க போனால் வீட்டு முதலாளிகள் வீட்டு மனை
பட்ட,மற்றும் வாக்களிப்பு கார்டு கேக்கின்றனர்.இவை எங்களிடம் இல்லை.வெளியில்
எங்கையாவது தங்கிவிடலாம் என்றால் பெண் பிள்ளைகள் இருகின்றனர்.அவர்களை வைத்து
கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை என்கின்றனர்.
இவர்களுக்காக லைட் அவுஸ் எதிர்ப்புறத்தில்
பிளாட் கட்ட வேலைகள் செய்யப்பட்டு வருகிறது.இவற்றை கட்டி முடிக்க குறைந்தது 3
வருடங்கள் ஆகும்.அதுவரைக்கும் இந்த மக்களின் நிலை மிகவும் மோசாமாக தான்
இருக்கும்.இருக்கும் என மக்கள் கூருகின்றனர்.தற்போது அந்த குடியில்களையும் அகற்ற
அரசு உத்திரவிட்டுள்ளது.அந்த இடங்களில் தற்போது சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று
கொண்டுள்ளது.மீனவர்களின் நலன் பற்றி எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை என்று
அப்பகுதி மீனவர்கள் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment