சந்தை பகுதியில் குழியால் அவதிப்படும் மக்கள்
சென்னை
வண்ணாரப்பேட்டையில்
உள்ள நாராயணப்ப தோட்டப்பகுதியில் 2௦௦க்கு மேற்பட்ட மக்கள் சென்று வரக்கூடிய
சந்தைப்பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் குழி தோண்டி உள்ளதால் மக்கள் மிகவும்
சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வண்ணாரப்பேட்டை
பகுதியில் சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் இடமாகும். வாடிக்கையாளர்கள் அதிகம்
காணப்படுவர். அங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடிய பகுதியாகும்.
அங்கு குழி தோண்டப்பட்டு உள்ளதால் சாலை மிகவும் சிறியதாக உள்ளது. மக்கள் நடந்து
செல்ல மிகவும் அவதியாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்
செல்ல சிரமமாக உள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும்
பாதிப்புக்குள்ளாகின்றன.
இந்த பணியை
விரைவில் முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment