Wednesday, May 11, 2016



ஆமை உற்பத்தியை நோக்கி பயணிக்கும் பட்டினப்பாக்கம்
சென்னை,
பட்டினப்பாக்கம்,
மீனவர்களின் வாழ்விடப் பகுதிகளில் ஒன்று தான் பட்டினப்பாக்கம். இப்பகுதியில் பல வகையான வேலைகள்  மக்கள் செய்து வருகின்றனர். இங்கு முக்கியமான வேலைகள் மீன் பிடித்தல், இவற்றை தொடர்ந்து தற்போது ‘’அறக்கட்டளை அமைப்பில் இருந்து, கடலில் வாழும் உயிரினங்கள், நாளுக்குநாள் குறைந்துக் கொண்டே வருகின்றன. எனவே விலங்குகளின் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற நோக்கில், ஆமைகள் வளச்சியை 4௦ வருடங்களுக்கு முன் துவங்கியுள்ளனர். ஆமைகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருவதால், ஆமைகளை வளர்க்க அறக்கட்டளை அமைப்பு முன் வந்துள்ளது.
      ஆமை முட்டைகளை எடுத்து, மணல்  பரப்பில் குழி தோண்டி அந்த முட்டைகளை போட்டு பிறகு மணலை மூடி விடுவர். இந்த மணல் பரப்பில் 15௦ முதல் 16௦ முட்டைகள்  வைக்கபடுகின்றன. பிறகு வெளிச்சம் அந்த மணல் பரப்பில் விழுமாறு கூடாரம் அமைக்கப்பட்டு அவற்றிற்கு தேவையான தகுந்த சூழல் பொருத்தப்பட்டுள்ளன. 45 முதல் 46 நாட்கள் கழித்து முட்டைகள் பொரிய ஆரம்பிக்கும். பிறகு முட்டைகள் வெப்பத்தினால் வெடிய ஆரம்பிக்கும், பிறகு ஆமைகள் வெளியே  வர ஆரம்பிக்கும். ஆமைகள் நகர ஆரம்பிக்கும் பொது வெளிச்சம் இருந்தால் அவை கடலை நோக்கி சென்றுவிடும், வெளிச்சம் இல்லை என்றால் அங்கு வேலை செய்யும் பணியாளர் அந்த பொறித்த ஆமைகளுக்கு வெளிச்சம் காட்டி [டார்ச் லைட்] அவை கடலில் போய் சேரும் வரை அவற்றிற்கு உதவி செய்வர்.
இவை பற்றி அங்கு இருக்கும் பணியாளரிடம் கேட்கும்போது, அவர் ஒரு சிலவற்றை சொன்னார். அவர் பெயர் நந்தன், வயது[45], படிப்பறிவு இல்லாதவர், ஆனால் சமூக பணி அவரது வேலை. இவர் இப்பகுதியில் கடந்த 35 வருடங்களாக வேலை செய்து வருகிறார். குடும்பம் ஏழ்மை.அதனால் அறக்கட்டளை அமைப்பில் அவரது குடும்பத்திற்கும், மற்றும் அந்த ஆமை வளர்ப்பில் உள்ள அனைவர்க்கும் உதவி செய்து வருகின்றனர். இந்த ஆமை வளர்ப்பில் கல்லூரி  இளைஞர்களும், மற்றும் வெளிநாட்டு இளைஞர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆமை வளர்ப்பில் வெளிநாட்டு இளைஞர்களே அதிக ஈடுபாடு காட்டி வருவதாக கூறினார்.
 இவற்றில் முற்றிலும் சமூகப்பணி செய்து வரும் ஆட்களே உள்ளனர். பிறகு அறக்கட்டளை அமைப்பு மட்டும் தான் இப்பணியை அந்த இடத்திலும், பெசன்நகர் பகுதிகளிலும் செய்து வருகின்றனர். பொதுவாக ஆமைகள் பட்டினப்பாக்கம் முகத்தானில் இருந்து எம்.ஜி.ஆர் சமாதி வரைக்கும் முட்டைகளை இட்டு விடும். பிறகு, அவற்றை சேகரித்து எடுத்து வந்து ஒன்றாக சேர்த்து திரும்பவும் அப்பணியை ஆரம்பிப்பர். இவற்றிக்கு மரக்குச்சிகளால் ஒரு கூடாரம் அமைத்து அவைகள் வெளியே செல்லாதவாறு கொணிப்பைகளை வைத்து அடைத்து விடுவர். அவர் இப்பணியில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளார். எனவே இப்பணியே அவர் சமூகப்பணியாக செய்வது பெரும் மகிழ்ச்சி எனக் கூறினார்.  

No comments:

Post a Comment