Wednesday, May 11, 2016



மீனவர் வாழ்வில் பங்கு பெரும் படகுகள்
’உழைப்பில்லாமல் உயர்வில்லை’’ என்னும் பழமொழிக்கேற்ப, பல்வேறு மீனவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு ,ஆழக்கடலில் சென்று மீன்களை பிடித்து,அவற்றை விற்பனை செய்து அவற்றில் வரும் வருமானத்தில் தான் தனது  வாழ்கையை நடத்தி வருகின்றனர் மீனவர்கள்.இவர்களுக்கு வாழ்வாதார வசதிகள் என சொல்லிக்கொண்டால் அவை இல்லை எனக் கூறுகின்றனர்.
 இருப்பின்னும்  தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தைக்  கொண்டு குடும்பத்தையும் மற்றும் மீன் பிடித்தலுக்கு தேவையான வலைகள்,துடுப்பு ,படகு என பல வகையான பொருட்கள் வாங்குவதற்கு இவர்களின் வருமானம் போதவில்லை எனலாம்.இந்த மீன் பிடிக்கிற தொழிலை பற்றி பட்டினபாக்கத்தில் உள்ள ஒரு மீனவரிடம் கேட்ட பொழுது அவர் கூறினவற்றுள் சிலவான.
பிரான்சிஸ்[79],ஹௌசிங் போடில் வாழ்ந்து வருகிறரர். இவரது குடும்பம் கூட்டு குடும்பம்.பரம்பரை பரம்பரையாக மீன் பிடித்தல் தொழிலை செய்து வருகிறரர்.தனது 1௦ வயதில் மீன் பிடித்தல் தொழிலை தொடங்கினார்.இவர் கடந்த  79 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறார்.பல மீனவர்கள் கட்டு மார படகுகளை உபயோகிக்கின்றனர்,ஆனால்  கொஞ்சம் வசதி உள்ளவர்கள் ‘’பைபர் படகு’’ உபயோகிக்கின்றனர்.இந்த கட்டுமரங்கள் கேரளாவில் இருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது .பின்னர் மீனவர்கள் தங்களுக்கு தேவையான மரங்களை எடுத்து,படகு செய்ய ஒரு நபரிடம் கொடுத்து விடுவர்.
கட்டுமரப் படகு;
கட்டு மரப்படகு முற்காலங்களில் இருந்தே அதிகமாக உபயோகிக்க படுத்தப்பட்டன. ஒரு கட்டு மரம் 4,௦௦௦ ரூபாய் , ஆனால் படகு செய்ய செய்க்கூலி 1,௦௦௦ரூ  கொடுத்து செய்வதாக கூறினார் .இந்த படகுகளில் 3,4 கிலோ மீட்டர் சென்று மீன்களை பிடித்து வருவ தாக கூறினார்.
பைபர் படகு;
  பைபர் படகு இப்போது உபயோகப்படுத்துகிற ஒரு படகு,இவை  தற்போது 12 லட்சம் விற்கப்படுகிறது. இப்படகில் 4 பேர் மட்டுமே பயணிக்க முடிவும்.இப்படகில் சுமார் 7,கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.மற்றும் மீன் பிடித்தலுக்கு ‘’பன் வலை’’ அவர்கள் அதிகமாக உபயோகிக்கப் படுத்துகின்றனர். இவர்கள் காலை மீன் பிடிக்க சென்றால்,மாலை தான் வீடு திரும்புவர்.இவர்களின் வருமானம் 3 மாதம் நன்றாக வரும்,ஆனால் மற்றைய நாட்களில் வருமானம் குறைவு .பைபர் படகு வைத்திருப்பவர்கள் அதிக வருமானம் ஈட்டுவதாகவும் , மரப்படகுகள்  வைத்திருப்பவர்கள் குறைவாக வருமானம் ஈட்டுவதாக அவர் தனது கருத்தைக் கூறுகின்றார்.             
 

No comments:

Post a Comment