Wednesday, May 11, 2016



வீடுகள் சரி இல்லாத காரணத்தினால் மக்களுக்கு நேரிடபோகும் அபாயம் 
சென்னை
  சேத்துப்பட்டில் வசிக்கும் ஏழை மக்கள் குடிசைகளிலும்,ஓட்டு வீடுகளிலும் வருகின்றன.இவர்களின் வீடுகள் சரியில்லாத காரணத்தினால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
   கடந்த 4௦ வருடங்களாக சேத்துப்பட்டு மக்கள் குடிசை,ஓட்டு வீடுகளில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி ரவி[4௦] என்பவர் பகலில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும் பொது வீட்டின் மேல் இருந்த  சீல்டிங் அவரின் உடலில் விழுந்ததால் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது
   எனவே அப்பகுதி மக்கள் வீட்டு வரியா தலைவரிடம் சென்று எங்களுக்கு முறையான வீடு கட்டி தர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளனர்
  


முதன்முறையாகபுள்ளிவிவரம்சேகரித்துஓட்டுக்கேட்கும்தொகுதி
சென்னை
சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதி 114 அ வட்டம் 16 பாகத்தில் உள்ள மொத்த வீடுகள் மற்றும்வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு புள்ளிவிவரம் காட்டப்பட்டுள்ளன.
சேப்பாக்கத்தில் உள்ள  114 அ வட்டம் 16 பாகத்தில் மொத்த வீடுகளையும் கணக்கெடுத்து அந்த வீட்டில் எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள் அதை பாகமாக பிரித்து வாக்காளர்கள் எத்தனை என்பதை புள்ளி விவரத்தோடு சேப்பாக்கத்தில்உள்ள சி.என்.கே சாலையில்ஒட்டப்பட்டுள்ளன
இத்தொகுதியில் வேற்பாளராக நிற்பவர் அன்பழகன். இதுபோல் வேறு எந்த தொகுதியிலும் புள்ளி விவர வாக்கு சேகரிப்பு நடந்ததில்லை. இதுவேமுதல்முறையாகும். இது ஒரு வித்தியாசமான வாக்கெடுப்பாகும்.


மீனவர்களின் ஆதங்கம்,குடியிருப்பில் இருந்து வெளியேறிய மீனவர்கள்
சென்னை பட்டினப்பாக்கம்
   சென்னை கலங்கரை விளக்கத்தில் உள்ள நொச்சிக்குப்பம்,டுமில்குப்பம்,பட்டினப்பாக்கத்தில் உள்ள சாலைகளில் விரிவுபடுத்த,அந்த சாலையோரங்களில் உள்ள மீன் தொழிளாலர்களையும்  அந்த சாலையை ஒட்டியுள்ள குடியுருப்பில் இருக்கும் மக்களையும் வேறு இடம் பெயர உத்திரவிட்டுள்லதாகவும்,புதிய மீன் மார்க்கெட் உருவாக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இதனால் குடியிருப்பில் இருந்து வெளியேறிய மீனவர்கள் பெரும் தவிப்பில் இருப்பதாக அவர்களுள் ஒரு மீனவர் கூறிப்பிட்டுள்ளர்.

   சென்னையில் பல்வேறு இடங்களில் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.அவர்களின் வாழ்வாதாரம் மீன்  பிடித்தல். இவற்றை விற்பனை  செய்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த மார்ச் எட்டாம் தேதி அன்று லைட் அவுஸ் பகுதியில் உள்ள மெரீனா இருப்பு பாதையில் மீன் கடைகள் வைத்திருப்பவர்களிடம் அதாவது கார்பரேஷ்ன்ஓர்கர்ஸ்,மற்றும் அங்கு தினமும் வைத்திருக்கும் மீன் கடைகள் போன்றவற்றை அப்புறப்படுத்துமாறு மாநகர அரசு உத்திரவிட்டுள்ளது.காரணம் மெரீனா லூப் ரோடு போடுவதற்காக ரூபாய் 47.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.நீண்ட நாட்களாக  மீன் கடை வைத்திருந்த மீனவர்களுக்கு சிறிது நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.
   தமிழ்நாடு சிலம் ஏரியாக்களில் நொச்சிக்குப்பம்,டுமில்குப்பம்,பட்டினப்பாக்கம்போன்றவை உள்ளன.இந்த ஏரியாக்களில் 631 குடும்பங்கள் நொச்சிக்குப்பம்,டுமில்குப்பத்தில் வாழ்ந்து வருகின்றனர்.இப்பகுதியில் வசித்த மக்கள் தற்போது கண்ணகி நகர் பகுதியில் குடிபெயர்ந்துள்ளதாக கூருகின்றனர்.மற்றவர்கள் அப்பகுதியிலே கடற்கரை பகுதியில் குடியில் போட்டு வசிக்கின்றனர்.இவை பற்றி அவர்களிடம் கேட்டபோது நாங்கள் கடந்த 45 வருடங்களாக இப்பகுதியில் வசித்து வருகிறோம்.திடிரென எங்களை போக சொன்னால் எங்கு செல்வது.வீடுகள் வாடைகைக்கு வங்க போனால் வீட்டு முதலாளிகள் வீட்டு மனை பட்ட,மற்றும் வாக்களிப்பு கார்டு கேக்கின்றனர்.இவை எங்களிடம் இல்லை.வெளியில் எங்கையாவது தங்கிவிடலாம் என்றால் பெண் பிள்ளைகள் இருகின்றனர்.அவர்களை வைத்து கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை என்கின்றனர்.

   இவர்களுக்காக லைட் அவுஸ் எதிர்ப்புறத்தில் பிளாட் கட்ட வேலைகள் செய்யப்பட்டு வருகிறது.இவற்றை கட்டி முடிக்க குறைந்தது 3 வருடங்கள் ஆகும்.அதுவரைக்கும் இந்த மக்களின் நிலை மிகவும் மோசாமாக தான் இருக்கும்.இருக்கும் என மக்கள் கூருகின்றனர்.தற்போது அந்த குடியில்களையும் அகற்ற அரசு உத்திரவிட்டுள்ளது.அந்த இடங்களில் தற்போது சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று கொண்டுள்ளது.மீனவர்களின் நலன் பற்றி எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மீனவர்கள் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளனர்.


மீனவர் வாழ்வில் பங்கு பெரும் படகுகள்
’உழைப்பில்லாமல் உயர்வில்லை’’ என்னும் பழமொழிக்கேற்ப, பல்வேறு மீனவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு ,ஆழக்கடலில் சென்று மீன்களை பிடித்து,அவற்றை விற்பனை செய்து அவற்றில் வரும் வருமானத்தில் தான் தனது  வாழ்கையை நடத்தி வருகின்றனர் மீனவர்கள்.இவர்களுக்கு வாழ்வாதார வசதிகள் என சொல்லிக்கொண்டால் அவை இல்லை எனக் கூறுகின்றனர்.
 இருப்பின்னும்  தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தைக்  கொண்டு குடும்பத்தையும் மற்றும் மீன் பிடித்தலுக்கு தேவையான வலைகள்,துடுப்பு ,படகு என பல வகையான பொருட்கள் வாங்குவதற்கு இவர்களின் வருமானம் போதவில்லை எனலாம்.இந்த மீன் பிடிக்கிற தொழிலை பற்றி பட்டினபாக்கத்தில் உள்ள ஒரு மீனவரிடம் கேட்ட பொழுது அவர் கூறினவற்றுள் சிலவான.
பிரான்சிஸ்[79],ஹௌசிங் போடில் வாழ்ந்து வருகிறரர். இவரது குடும்பம் கூட்டு குடும்பம்.பரம்பரை பரம்பரையாக மீன் பிடித்தல் தொழிலை செய்து வருகிறரர்.தனது 1௦ வயதில் மீன் பிடித்தல் தொழிலை தொடங்கினார்.இவர் கடந்த  79 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறார்.பல மீனவர்கள் கட்டு மார படகுகளை உபயோகிக்கின்றனர்,ஆனால்  கொஞ்சம் வசதி உள்ளவர்கள் ‘’பைபர் படகு’’ உபயோகிக்கின்றனர்.இந்த கட்டுமரங்கள் கேரளாவில் இருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது .பின்னர் மீனவர்கள் தங்களுக்கு தேவையான மரங்களை எடுத்து,படகு செய்ய ஒரு நபரிடம் கொடுத்து விடுவர்.
கட்டுமரப் படகு;
கட்டு மரப்படகு முற்காலங்களில் இருந்தே அதிகமாக உபயோகிக்க படுத்தப்பட்டன. ஒரு கட்டு மரம் 4,௦௦௦ ரூபாய் , ஆனால் படகு செய்ய செய்க்கூலி 1,௦௦௦ரூ  கொடுத்து செய்வதாக கூறினார் .இந்த படகுகளில் 3,4 கிலோ மீட்டர் சென்று மீன்களை பிடித்து வருவ தாக கூறினார்.
பைபர் படகு;
  பைபர் படகு இப்போது உபயோகப்படுத்துகிற ஒரு படகு,இவை  தற்போது 12 லட்சம் விற்கப்படுகிறது. இப்படகில் 4 பேர் மட்டுமே பயணிக்க முடிவும்.இப்படகில் சுமார் 7,கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.மற்றும் மீன் பிடித்தலுக்கு ‘’பன் வலை’’ அவர்கள் அதிகமாக உபயோகிக்கப் படுத்துகின்றனர். இவர்கள் காலை மீன் பிடிக்க சென்றால்,மாலை தான் வீடு திரும்புவர்.இவர்களின் வருமானம் 3 மாதம் நன்றாக வரும்,ஆனால் மற்றைய நாட்களில் வருமானம் குறைவு .பைபர் படகு வைத்திருப்பவர்கள் அதிக வருமானம் ஈட்டுவதாகவும் , மரப்படகுகள்  வைத்திருப்பவர்கள் குறைவாக வருமானம் ஈட்டுவதாக அவர் தனது கருத்தைக் கூறுகின்றார்.             
 



சந்தை பகுதியில் குழியால் அவதிப்படும் மக்கள்
சென்னை
வண்ணாரப்பேட்டையில் உள்ள  நாராயணப்ப தோட்டப்பகுதியில்  2௦௦க்கு மேற்பட்ட மக்கள் சென்று வரக்கூடிய சந்தைப்பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் குழி தோண்டி உள்ளதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
  
வண்ணாரப்பேட்டை பகுதியில் சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் இடமாகும். வாடிக்கையாளர்கள் அதிகம் காணப்படுவர். அங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடிய பகுதியாகும். அங்கு குழி தோண்டப்பட்டு உள்ளதால் சாலை மிகவும் சிறியதாக உள்ளது. மக்கள் நடந்து செல்ல மிகவும் அவதியாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றன.
இந்த பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.